முன்நோக்கி பாயும் இலங்கை இராஜதந்திரம்

Srilanka Covid
By Independent Writer Aug 29, 2021 10:08 PM GMT
Independent Writer

Independent Writer

in கட்டுரை
Report

கொரோனோ உயிர்க்கொல்லி நோய் நெருக்கடிக்குப் பிந்தையதான புதிய அரசியல் ஒழுங்கு ஒன்று தோற்றம் பெறுகிறது. அப்புதிய உலக ஒழுங்கு நோய்த்தாக்கத்தின் விளைவால் ஏற்பட்டிருக்கும் பொருளியல் தாக்கத்திலிருந்து தான் ஆரம்பமாகின்றது என கட்டுரையாளர் திபாகரன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எனவே கொரோனாவுக்கு பின்னான அப்புதிய உலக ஒழுங்கு என்பது இந்து சமுத்திர போக்குவரத்திலும், அதன் கடற்பாதை ஆளுகையிலும் மையம் கொண்டுள்ளது. இந்து சமுத்திரத்தின் மையப்பகுதியில் உள்ள இலங்கைத்தீவும் இந்தியாவும் புதிய உலக ஒழுங்கின் முக்கிய கேந்திரஸ்தானத்தில் உள்ளன.

எனவே ஈழத்தமிழர் பிரச்சினை என்பது புதிய உலக அரசியல் ஒழுங்கில் தவிர்க்கமுடியாத கேந்திர ஸ்தானத்தையும், பங்கையும், பாத்திரத்தையும் வகிக்கப் போகிறது.

சீன- மேற்குலகிற்கு இடையிலான இந்துசமுத்திர ஆதிக்கப் போட்டியில் ஈழத் தமிழர்களுடைய நலன்களும், அவர்களுடைய இருப்பும் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மேற்குலகிற்கும், இந்தியாவுக்குமான செல்வாக்கிற்கு உறுதியாக நிலைபெறும். மாறாக அது சிங்கள இனத்துக்கு சாதகமானதாக ஈழத்தமிழர் நலன்கள் சிதைக்கப்பட்டால் இலங்கைத் தீவு முற்றுமுழுதாக சீன மாயமாகிவிடும்.

இலங்கைத்தீவு சீன மயமாதலை தடுப்பதற்கும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் ஆளுகையை தடுப்பதற்கும் ஈழத்தமிழர்கள் தமது தேசிய அபிலாசைகளை அடைந்தவர்களாக அல்லது விடுதலை பெற்றவர்களாக இருப்பது முக்கிய நிபந்தனையாகும். சீனாவுக்கும் மேற்குலகம் சார்ந்த இந்தியாவுக்கும் இடையிலான இந்து சமுத்திர அதிகாரப் போட்டியில் ஈழத்தமிழர்கள் முக்கிய பாத்திரம் வகிக்கிறார்கள்.

இன்று இலங்கைத் தீவில் சீனா கால்பதித்துவிட்டது. அதனை அகற்றுவதற்குறிய இலகுவான வழிகள் ஈழத்தமிழர் மூலமாக உள்ளன. இலங்கைத் தீவின் மூன்றில் இரண்டு கடற்கரையேரத்தில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

கடற்கரையோரமாக பரந்துவாழும் ஈழத்தமிழினம் அதனுடைய தேசிய அபிலாசைகளை பூர்த்தி செய்தால் இலங்கைத் தீவின் மூன்றிலிரண்டு கடற்பகுதி தமிழர்களின் கையில் இருக்கும். அவ்வாறு தமிழர்களின் கையில் கடல் இருந்தால் சீனா இலங்கை தீவில் இருந்து முற்றுமுழுதாக வெளியேற்றப்பட வேண்டியிருக்கும் அல்லது சீனா முடக்கப்படும்.

10ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரை இந்து-பசுபிக் சமுத்திரப் பகுதிகளிலுள்ள வங்கக்கடலிலும், தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளிலும், அராபியக் கடலிலும் சோழர்களின் கடற்படையும், சோழர் கணங்களும்(வர்த்தக கம்பனிகள்) ஏகசெல்வாக்குச் செலுத்தின. சோழருடைய கடல் ஆதிக்க கொள்கை தான் இன்று இந்தியாவுக்கு பொருத்தமானது.

சோழருடைய கடல் ஆதிக்க கொள்கையை உற்று அவதானித்தால் மேற்குறிப்பிட்ட இலங்கைத்தீவின் தமிழர் பிரதேசம் சோழர்களின் கடல் ஆதிக்க கடற்கொள்கையின் வியுகத்தில் இணைவது புரியும். எனவே இன்று ஏற்பட்டிருக்கின்ற இந்து சமுத்திரப் பிராந்திய கொதிநிலை ஈழத்தமிழர்களுக்கு என்றுமில்லாத அளவுக்கு சாதகத்தன்மைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டுதான் தமிழர் மேற்கொள்ள கூடிய அரசியல் காய்நகர்த்தல்களை தகர்ப்பதற்காகவும், இந்தியாவும் ஈழத் தமிழர்களும் இணைந்து மேற்கொள்ளக்கூடிய அரசியல் நகர்வுகளை தடுக்கவும் முன்கூட்டியே ஊகித்து சிங்கள ராஜதந்திரம் தற்போது தொழிற்பட தொடங்கிவிட்டது.

அத்தகைய சாணக்கியம் மிக்க செயற்பாடுகளில் ஒன்றுதான் மிலிந்த மொரகொட அவர்களை இந்தியாவுக்கான அமைச்சரவை அந்தஸ்துடன் கூடிய வெளிநாட்டு தூதுவராக அதாவது வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கும் முடிவு அமைந்துள்ளது.

ஒரு வதிவிடப் பிரதிநிதியை அமைச்சரவை அந்தஸ்த்தடன் இந்தியாவிற்கு அனுப்பி அங்கே தங்கியிருந்து இலங்கை சார்ந்த அரசியல் விவகாரங்களை கையாள்வதற்கான வியூகத்தை இலங்கை வகுக்கின்றது என்றால் இன்று ஈழத்தமிழர் பிரச்சனை இந்தியா சார்ந்து எத்தகைய முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்த மிலிந்த மொரகொடவின் நியமனம் பற்றியும் அதிலுள்ள அரசியல் ராஜதந்திர நுணுக்கம் பற்றியும் அறிவுபூர்வமாக ஆராய வேண்டும். பொதுவாக உலகளாவிய அரசியல் ராஜதந்திர மரபுகளில் ஒரு வெளிநாட்டு தூதுவரை அந்த நாட்டின் மன்னனோ அல்லது ஜனாதிபதியோ அதாவது நாட்டின் தலைவரால் நியமிக்கப்படுவார்.

எனவே நியமனத்தை வழங்குவதும் நியமனத்தை ஏற்பதும் அரசுத் தலைவரினால் மட்டுமே மேற்கொள்ளப்படும். பொதுவாக ஒருநாட்டின் வெளிநாட்டுத் தூதுவரை அமைச்சரவை அந்தஸ்துடன் வதிவிடப் பிரதிநிதியாக அனுப்பும் வழக்கம் நடைமுறையில் இன்று இல்லை.

ஆனால் பெரும் வல்லரசுகளும் குடியேற்றவாத நாடுகளும் தாங்கள் அடிமைப்படுத்திய, அல்லது அடிமைப்படுத்த, அல்லது தமது அரசியல் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரக்கூடிய நாடுகளின் மீதும், தமது செல்வாக்கு மண்டலத்துக்குள் அமைந்துள்ள நாட்டினை தங்கள் அரசியலால் வெற்றி கொள்வதற்காகவும் இவ்வாறான அமைச்சரவை அந்தஸ்துடன் கூடிய வதிவிடப் பிரதிநிதியை அனுப்பும் நடைமுறை இருந்துள்ளது.

அதனை கடந்த காலத்தில் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற பேரரச நாடுகளின் நடைமுறைகளில்த்தான் காணலாம். அவ்வாறுதான் 1980களில் இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கம் ஜி பார்த்தசாரதி அவர்களை இலங்கைக்கான விசேட தூதுவராக நியமித்தமையும் நிகழ்ந்தது. அது இலங்கை விவகாரத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியாகவும் அமைந்து.

அத்தோடு அந்த நியமனம் ஒரு சில மணித்தியாலங்களாகவோ அல்லது சில நாட்களுக்கு மாத்திரமே இருந்ததையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஆனால் இத்தகைய மேலாதிக்க ராஜதந்திர நடைமுறையை இன்று இலங்கை அரசு இந்தியா அரசின் மீது மேற்கொள் முனைகின்றது.

அப்படியென்றால் இலங்கையின் அரசியல் ராஜதந்திர வல்லமையையும், முதிர்ச்சியையும்,வியூகத்தின் பின்னணி-யையும் இந்தியாவும் ஈழத்தமிழரும் மிக ஆழமாக சிந்திக்க வேண்டியது அவசியமானது. இத்தகைய அமைச்சர்களுடன் கூடிய ஒரு வதிவிடப் பிரதிநிதியை இந்தியா சிலவேளை ஏற்றிவிட்டால் அது வரலாற்றில் இந்தியாவின் உலகளாவிய அரசியல் இராஜதந்திர அந்தஸ்துக்கு இழுக்காக அமையும்.

இந்தியாவின் தென் கோடியில் இருக்கின்ற ஒரு சுண்டங்காய் குட்டித்தீவு இந்திய அரசியலை வளைக்கக் கூடிய வல்லமை கொண்டதாக இருப்பதாகவே கணிக்கப்படும். அத்தோடு இந்திய அரசியலில் ராஜதந்திர அறிவியல் நுட்பம் கொண்டவர்கள் இல்லை என இலங்கை அரசு கருதுவதாகவும் அமையும்.

இது இவ்வாறிருக்க அமைச்சரவை அந்தஸ்து டன் கூடிய வதிவிடப் பிரதிநிதி நியமனத்தை இந்தியா ஏற்றுக் கொண்டால் நடைமுறையில் எத்தகைய விளைவுகள் ஏற்படுத்தும் என்பதை மிக ஆழமாக கவனிக்கவேண்டும்.

அமைச்சரவை அந்தஸ்துடன் கூடிய ஒரு வதிவிடப் பிரதிநிதி நியமிக்கப் படுகையில் இலங்கையைப் பொறுத்தவரையில் இரண்டு வெளிநாட்டு அமைச்சர்கள் இருப்பதான நிலை தோன்றும். அதாவது உலகிலுள்ள 196 நாடுகளில் 194 நாடுகளுக்குறிய ஒரு வெளிவிவகார அமைச்சராக G.L பீரிஸ் அவர்களும் இந்தியா என்கின்ற ஒரு நாட்டுக்கு தனியான ஒரு வெளிநாட்டு அமைச்சராக மிலிந்த மொரகொடவும் இருப்பர்.

அத்தோடு மிலிந்த மொரகொட இலங்கையைப் பொருத்தவரை அவர் அமைச்சரவை அந்தஸ்துடையவர் என்பதனால் அவர் பிரதமருக்கும் அரசுத் தலைவருக்கும் மாத்திரமே பதிலளிக்கக் கடமைப்பட்டவர். அவரை இலங்கையில் இந்த இருவரைத் தவிர வேறு யாரும் கேள்வி கேட்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது.

அவ்வாறு இந்தியாவின் பக்கம் பார்த்தால் இந்தியாவில் அவர் வதிவிடப் பிரதிநிதியாக அனுப்பப்பட்டால் அவருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்துடன்தான் வரவேற்கப்பட வேண்டும். பராமரிக்கப்பட வேண்டும்.

தொடர்பாடல்களை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தியாவில் இத்தகைய நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின்முன் இந்தியாவின் ராஜதந்திர கொள்கை வகுப்பாளர்களும் அரச அதிகாரிகளும் சமமாகப் பேசுகின்ற தகுதியை இழந்து விடுவர்.

இவ் வதிவிடப் பிரதிநியுடன் இந்திய அரசாங்கத்தின் தலைவர்கள் மாத்திரமே பேச முடியும். அவர்களுடன்தான் இந்த இலங்கை அரசப் பிரதிநிதி பேசுவார். அதுவே உலக அரசியல் ராஜதந்திர மரபும்கூட. இத்தகைய நிலைமை இந்திய வெளியுறவு அரசியல் விவகாரங்களில் பெரும் நிர்ப்பந்தங்களையும் பெரும் தலைவலியை இந்தியாவுக்கு ஏற்படும்.

எனவே அமைச்சரவை அந்தஸ்துடன் கூடிய வதிவிடப் பிரதிநிதி என்ற ஒரு நெருப்புத் துண்டை தன்கையில் ஏந்தவோ, அதனை தன் மார்பில் அணைத்துக் கொள்ளவோ இந்தியா இடமளிக்குமா?? பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஈழத் தமிழினத்தின் அரசியல் உரிமைகளை மறுப்பதற்காகவும், அவர்களை இனப்படுகொலை செய்வதற்காகவும், இதுவரை காலமும் அவர்கள் மேற்கொண்ட இனப்படுகொலையை மறைப்பதற்காகவும், சிங்கள ராஜதந்திரம் எத்தகைய மதிநுட்பமான திட்டங்களை வகுத்துக் ஏற்படுகிறது என்பது இங்கே புலனாகிறது.

எனவே எதிரி என்ன ஆயுதம் எடுக்கிறானோ அந்த ஆயுதத்தினால்த்தான் நாம் பதில் சொல்ல வேண்டும். அதுவே போராடும் இனத்தின் நிர்ப்பந்தம். அதுவே போராடும் இனத்திற்கு எதிரிஅளிக்க ஆயுதமாகவும் அமைகிறது.எதிரி என்ன மொழியில் பேசுகிறானோ அந்த மொழியில் ஈழத்தமிழர் பதிலளிக்க தயாராக வேண்டும்.

இந்த விவகாரம் சார்ந்து ஈழத்தமிழர்கள் மிக கவனமாக அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். சிங்கள தேசம் சாதுரியமான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு இருக்கின்றது.

இந்த ராஜேந்திர நகர்வுகளை முறியடிப்பதற்கான பெரும் மக்கள் திரள் அரசியலை ஈழத் தமிழினம் முன்னைடுக்க வேண்டும். "தமிழீழத்தின் திறவுகோல் சென்னை-புதுடில்லி- நியூயோகக்கில்த்தான் உள்ளது" என்ற மு.திருநாவுக்கரசு அவர்களின் கூற்றைக் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

இந்த விடயத்தில் ஈழத் தமிழர்கள் தமிழக அரசியல் கட்சிகளுடனும் தமிழக மக்களுடன் இணைந்து இந்திய அரசுக்கு பெரும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். இந்தியா அதனுடைய அரசியல் அந்தஸ்தையும் அதோநேரம் தமிழினம் தன்னுடைய அரசியல் நலன்களையும் ஒன்று சேர தக்கவைக்க வேண்டியது அவசியமானது என்றும் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் மேற்கு, Scarborough, Canada

01 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், செம்பியன்பற்று

29 Mar, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஒலுமடு மாங்குளம், யாழ் நயினாதீவு 8ம் வட்டாரம், Jaffna, Harrow, United Kingdom

09 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

29 Mar, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

27 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், கொழும்பு

28 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆனைக்கோட்டை, மட்டக்களப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம், Manchester, United Kingdom

27 Feb, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், யாழ்ப்பாணம்

27 Mar, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு

25 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், Mississauga, Canada

09 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை, நவக்கிரி, Scarborough, Canada

26 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கனடா, Canada

27 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Markham, Canada

09 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நவாலி, வட்டக்கச்சி

26 Mar, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரெழு, உரும்பிராய் கிழக்கு

28 Feb, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Aulnay-sous-Bois, France

24 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US