அவுஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி உயிரிழந்த இலங்கை அதிகாரி
இலங்கையின் முன்னாள் அமைச்சின் செயலாளரான நீல் ஹபுஹின்ன, அவுஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் சம்பவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பதவி உட்பட பல அரசாங்கங்களில் முக்கிய பதவிகளை நீல் ஹபுஹின்ன வகித்துள்ளார். இறக்கும் போது அவரின் 61 ஆகும்.
இலங்கையர் பலி
அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் , குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு சென்று பல வருடங்களாக வசித்து வந்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் தனது மூத்த மகளின் திருமணத்தை கொண்டாடுவதற்காக அவர் கடைசியாக இலங்கைக்கு வந்தார்.
இரண்டு மகள்களின் தந்தையான இவரது மனைவி வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ Cineulagam
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam