வெளிநாடு ஒன்றிலிருந்து அதிரடியாக நாடு கடத்தப்பட்ட 46 இலங்கையர்கள்
மத்திய கிழக்கு நாட்டிற்கு பணியாளராக சென்று சட்டவிரோதமாக தங்கியிருந்த 46 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களில் 39 பேர் வீட்டு பணிப்பெண்கள் எனவும் எஞ்சிய 07 பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட காலமாக வீசா இன்றி சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த இவர்கள், சுகவீனங்கள், தனிப்பட்ட பிரச்சனைகள் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக இலங்கைக்கு வருவதற்காக இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
குவைத் அரசின் கலந்துரையாடல்
இலங்கைக்கு வருவதற்காக 2000க்கும் மேற்பட்ட இலங்கை வீட்டுப் பணியாளர்கள் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்துள்ளதாக தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்பட்ட இலங்கையர்களை இந்த நாட்டிற்கு அனுப்புவது தொடர்பாக குவைத் அரசின் உள்துறை அமைச்சருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இணைந்து மேற்கொண்ட துரித நடவடிக்கையின் விளைவாக இந்த இலங்கையர்கள் தற்காலிக விமான அனுமதிப்பத்திரத்தில் அனுப்பப்பட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |