அமெரிக்கா செல்லும் இலங்கை குழு
அமெரிக்கா, இலங்கை ஏற்றுமதிகளுக்கு விதித்துள்ள 30 சதவீத வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கம் முக்கியமான முயற்சியொன்றை மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக, அமைச்சர்கள் மற்றும் உயர் மட்ட அரச அதிகாரிகள் கொண்ட குழுவொன்று எதிர்வரும் 18ஆம் திகதி வொஷிங்டனுக்குச் செல்வதற்கு தயாராகியுள்ளது.
இது தொடர்பாக இன்று(15) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், "இந்த வரி சுமையை குறைக்கும் நோக்கில் அமெரிக்காவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சாதகமான முடிவு
ஒகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்பாக தீர்வு காண எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை குழுவில் திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
இந்தநிலையில், அரசாங்கம் இந்த பேச்சுவார்த்தைகளின் ஊடாக ஒரு சாதகமான முடிவை எதிர்பார்த்து செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
