இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டவர்கள் மலேசியாவில் கைது
ஹரக் கட்டா மற்றும் குடு சாலிடு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து தப்பிக்க தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக கூறப்படும் ஹரக் கட்டாவின் பிரதான உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிதிகம சுட்டி மற்றும் ஜிலே ஆகிய இரு பாதாள உலகக் குற்றவாளிகள் மலேசிய நாட்டின் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களின் கைதுகள் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் கிடைக்காவிட்டாலும், உண்மையை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் உண்மையாகவே கைது செய்யப்பட்டிருந்தால், அவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர்கள் நேற்று மலேசியாவில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இருவரும் நீண்ட நாட்களாக டுபாயில் தங்கியிருந்து பின்னர் அவர்கள் டுபாயில் இருந்து மலேசியா சென்றதை உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர்.
இருவரும் தற்போது வழக்கறிஞர்கள் உதவியுடன் டுபாய்க்கு நாடு கடத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
