இலங்கை சுங்க திணைக்களத்திற்கும் திறைசேரிக்கும் இடையில் முறுகல்
சுங்க வெகுமதி நிதி தொடர்பாக இலங்கை சுங்கத்திற்கும் திறைசேரிக்கும் இடையிலான முறுகல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பு துறைமுகத்தில் நேற்று 600க்கும் மேற்பட்ட கொள்கலன்களை கையாளாமல் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் கீழ் உள்ள வெகுமதி நிதியத்தில் மீதி பணம் நிதி அமைச்சுக்கு மாற்றப்படும் என திறைசேரி இலங்கை சுங்கத்திற்கு கடந்த வியாழக்கிழமை தெரிவித்ததியிருந்தது.
இந்நிலையில், குறித்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு வெகுமதிகளை வழங்குவதுடன், கூடுதல் நேர கொடுப்பனவுகள் மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக செலவிடப்படுவதால், சுங்க வெகுமதி நிதியை சுங்க இயக்குனர் நாயகம் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று சுங்கத்துறையினர் கோரி வருகின்றனர்.
சர்வதேச நாணய நிதியத் திட்டம்
அத்துடன் வெகுமதி நிதி, நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தால், அவர்களின் கொடுப்பனவுகள் தாமதமாகும் என்று கூறி சுங்க அதிகாரிகள் தங்கள் கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் கீழ், 14 நிறுவனங்களின் நிதிகள் நிதி அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுவதாகவும், எனவே, சுங்கத் துறையின் நிதியும் நிதி அமைச்சின் வரம்பிற்குள் வர வேண்டும் எனவும் நிதி அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி 100 மில்லியன் ரூபாவை வெகுமதி நிதியில் வைத்திருப்பதற்கும், மீதியை நிதி அமைச்சுக்கு மாற்றுவதற்கும் சுங்கத்துறைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனினும் சுங்க நிதியில் தற்போது 700 மில்லியனுக்கும் அதிகமான தொகை நிதி உள்ளதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும்;, அரசாங்கம் பிரச்சினைக்கு தீர்வுகாணத் தவறினால் மேலும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளவுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பராசக்தி படத்திற்கு எதிராக மோசமான விமர்சனங்களை பரப்பும் நபர்கள்.. கொந்தளித்த பராசக்தி பட நடிகர் Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri