வெளிநாடொன்றில் இலங்கையர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது
மலேசியாவில் விசா இன்றி தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் 83 ஆண்கள், 54 பெண்கள், 08 சிறுவர்கள் மற்றும் மூன்று குழந்தைகள் கைது செய்யப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலேசிய குடிவரவு குடியகல்வு திணைக்களம்
கைது செய்யப்பட்டவர்களில், இலங்கையர்களைத் தவிர, இந்தோனேசியா, நேபாளம், மியன்மார், பங்களாதேஷ், சீனா, பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் வந்துள்ளதாகவும் சிலர் ஒரு வருடத்திற்கும் மேலாக சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருவது மலேசிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முறையான அனுமதியின்றி வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தங்குமிடம் வழங்கியமை குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் மலேசிய குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

படத்த பாத்துட்டு, என்னயா ம*ரு படம் எடுத்து வெச்சிருக்க-னு கேட்டாரு" - RK Selvamani Open talk Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
