இலங்கை கிரிக்கெட் அணியின் நான்கு வீரர்கள் உடற்தகுதிகான் சோதனையில் தோல்வி
இலங்கை கிரிக்கெட் அணியின் நான்கு வீரர்கள் உடற்தகுதிகான் சோதனையில் தோல்வியடைந்துள்ளனர். சுகததாஸ மைதானத்தில் இந்த சோதனை இடம்பெற்றது.
இதன்போது வீரர்களின் உடற்தகுதியை காண்பதற்காக 8 நிமிடம் 35 செக்கன்களில் முடிக்கும் வகையில் 2 கிலோ மீற்றர் தூர ஓட்டப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 36 பேர் பங்கேற்ற நிலையில் 32 பேர் தகுதிப்பெற்றனர். ஏனைய 4 பேர் தகுதிப்பெறவில்லை.
இந்தநிலையில் அவர்களுக்கு 40 நாட்களுக்குள் மீண்டும் ஒரு சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள 20க்கு 20 உலகக் கிண்ணப்போட்டியில் குறைந்தளவான உடற்தகுதியைப் பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமை தெரிவித்துள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam