இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய பாதுகாப்பு அதிகாரிகளால் இடையூறு
உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை காண இந்தியா சென்றுள்ள இலங்கை விளையாட்டு ரசிகர்கள் அந்நாட்டு மைதானங்களில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றைய தினம்(29.10.2023) இடம்பெற்றிருந்தது.
இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது.
கடும் வாக்குவாதம்
இந்நிலையில் குறித்த போட்டியை பார்வையிடவந்த இலங்கை விளையாட்டு ரசிகர்கள் கொண்டு வந்த தேசியக் கொடிகளை மைதானத்திற்குள் எடுத்துச் செல்வதற்கு மைதானத்தின் நுழைவு வாயில்களுக்கு அருகில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சந்தர்ப்பம் வழங்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
போட்டியை காண ரசிகர்கள் இலங்கை அணியின் சீருடையை அணிந்திருந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து ரசிகர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 23 மணி நேரம் முன்

496 கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்த உலகின் அதிவேக கார்! ஜேர்மனியில் பறந்த காட்சிகள் வைரல் News Lankasri

குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam
