தமிழகத்தில் தலைமறைவாகியிருந்த இலங்கைத் தம்பதியினர் கைது!
சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் சென்று தமிழகம் – தூத்துக்குடி அருகே தலைமறைவாகி இருந்த இலங்கை தம்பதியை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து படகு மூலம் தூத்துக்குடி வந்த தம்பதியினர் தூத்துக்குடி - வைப்பாறு பகுதியில் தங்கி இருப்பதாக மதுரையில் உள்ள கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, மதுரை கியூ பிரிவு பொலிஸார் வைப்பாறு பகுதியில் தலைமறைவாகியிருந்த இலங்கையைச் சோ்ந்த தம்பதியை கைது செய்து மதுரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு முன்னெடுத்துள்ளார்.
குறித்த இருவரும் இலங்கையைச் சோ்ந்த பலருடன் படகு மூலம் கடந்த பெப்ரவரி மாதம் தூத்துக்குடிக்கு வந்ததும், அவா்களுடன் வந்தவா்கள் கனடா செல்லத் திட்டமிட்டு மதுரையில் பிடிபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் கியூ பிரிவு பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டு்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri