சுவிஸ் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழர்
சுவிஸ் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை மன்னார் மாவட்டம் பறப்பாங்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்து வாழும் சந்தியாப்பிள்ளை கபிரியேல் போட்டியிடவுள்ளார்.
எதிர்வரும் 22 ஆம் திகதி சுவீஸ் நாட்டில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாகப் இவர் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் சுவிஸ் நாட்டில் 1989 ஆம் அண்டு முதல் 25 வருடங்கள் மனநல வைத்தியசாலையிலும், 8 வருடங்கள் எலும்பு முறிவு வைத்தியசாலையிலும் ஆண் தாதியாக கடமைபுரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்
அரசாங்க அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்பாளராக 1990 ஆம் அண்டு முதல் கடமை புரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இவர் சுவிஸ் நாட்டில் மன்னார் மறைமாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 7 கத்தோலிக்க ஆலயங்களில் 2019 ஆம் ஆண்டிலிருந்து திருப்பண்டப் பொறுப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.
நகர சபை உறுப்பினராக 2016 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை அவர் தொடர்ந்து இருந்து வருகின்றார்.
இவர் இத்தேர்தலில் வெற்றிப் பெற்றால் சுவிஸ் நாடாளுமன்றத்தில் இவர் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என பதிவு செய்யப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.