இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை வர்த்தகரின் மோசமான செயல்-செய்திகளின் தொகுப்பு
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலன ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
வத்தளை மற்றும் பொரளை கோட்டா வீதியில் 4 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய ஊக்கமருந்துகளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை வர்த்தகர் ஒருவர் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியத்தில் உற்பத்தி செய்யப்படும் இந்த தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை இலங்கைக்கு அனுப்புவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஊக்கமருந்து தொடர்பாக இலங்கையில் நடத்தப்பட்ட முதல் சோதனை இது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,