இத்தாலியில் கோர விபத்தில் இலங்கை இளைஞன் பலி
இத்தாலியின் மிலான் நகரில் ஏற்பட்ட கோர விபத்தில் இலங்கை சேர்ந்த இளைஞன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவரும், இத்தாலியப் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மிலான் நகரில் தற்காலிகமாக வசித்து வந்த 23 வயதான மிதும் சந்தீப பெரேரா குரணகே என்ற இளைஞர் என தெரியவந்துள்ளது.
இலங்கை இளைஞன் பலி
உயிரிழந்தவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் பயணித்த எலிசா தியோடோரா என்ற 20 வயதான இத்தாலியப் பெண்ணும் விபத்தில் உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த இளைஞரும் பெண்ணும் பயணித்த மோட்டார் சைக்கிள், போக்குவரத்து சிக்னல்களைக் கவனிக்காமல் அதிவேகமாகச் சென்று வாடகைக் கார் ஒன்றின் மீது மோதியதாகத் தெரியவந்துள்ளது.
திறமையான தடகள வீரர்
விபத்தில் உயிரிழந்த இலங்கை இளைஞர், வென்னப்புவ, தும்மலதெனியவைச் சேர்ந்தவராகும். அவர் தனது குடும்பத்தின் மூத்த பிள்ளை மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற திறமையான தடகள வீரர் ஆவார்.
இந்த விபத்து நடந்தபோது, உயிரிழந்த இளைஞர் தனது தம்பி, தந்தை மற்றும் தாயுடன் இத்தாலியின் மிலான் நகரில் வசித்து வந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.
இத்தாலியின் மிலான் பொலிஸார் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 21 மணி நேரம் முன்
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மீனாவால் விஜயாவிற்கு வந்த ஷாக்கிங் நியூஸ், சீதாவை ஒரு வழி செய்த அருண்... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam