இலங்கை தமிழருக்கு இந்தியாவில் நேர்ந்த அநீதி!
இந்தியாவில், இலங்கை பெற்றோருக்கு பிறந்த ஒருவர், 34 வருடங்களுக்கு பின்னர் நாடற்றவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை இராமாபுரத்தைச் சேர்ந்த ஆர்.பாஹிசன், என்பவரே வட்டாட்சியர் அலுவலகத்தால் 'நாடற்றவர்' என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அவர், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள நிலையில்,தமக்கு நீதிக்கோரி அவர் சென்னை மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனு தாக்கல்
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றமும், இந்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் உரிய விளக்கத்தைக் கோரியுள்ளது.
அத்துடன், மனுதாரர் மீது கட்டாய நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவையும் நீதிபதி எம்.தண்டபாணி பிறப்பித்துள்ளார்.
இராமாபுரத்தைச் சேர்ந்த ஆர்.பாஹிசன், என்பவரே இந்த அநீதிக்கு உள்ளாகியுள்ளார்.
பாஹீசன், இந்திய கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, பேன் அட்டை, ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உட்பட்ட பல ஆவணங்களையும் தம்வசம் வைத்திருப்பதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



