பறக்கும் விமானத்தில் இலங்கையரால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா சென்ற விமானத்தில் பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்த கொண்ட இலங்கையருக்கு எதிராக மெல்போர்ன் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை அவர் நாட்டை விட்டு வெளியேற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
41 வயதான இலங்கையர் அசங்க மேத்யூ இன்று மெல்போர்ன் நீதவான் நீதிமன்றத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளர் மற்றும் இரண்டு ஆதரவாளர்களுடன் ஆஜரானார்.
பெண் பயணி
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா சென்ற விமானத்தில் பெண் பயணி ஒருவரிடம் அநாகரீகமான நடந்துக் கொண்டதாக செய்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
அதற்கமைய, இலங்கையரான சந்தேக நபர் டிசம்பர் 18 ஆம் திகதி மெல்போர்ன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது அநாகரீகமான செயல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது, மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
தடை உத்தரவு
அசங்க மேத்யூ கடுமையான பிணை நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் நாட்டை விட்டு வெளியேற தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
வாரத்திற்கு மூன்று முறை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.