இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தல்!
தற்போதைய அரசாங்கம், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தலை அறிமுகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் விதிமுறைகள் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
விவாதம்
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,''திறந்த பொருளாதாரத்தின் ஊடாக நாட்டிற்கு பொருத்தமான மற்றும் பொருத்தமற்ற பல பொருட்கள், சேவைகள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் தரப்படுத்தலைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதேவேளை தரமற்ற வெளிநாட்டு பொருட்கள் மற்றும் சேவைகள் இந்த நாட்டிற்கு கொண்டுவரப்படுவதனால், உள்நாட்டு தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உள்நாட்டு தொழில்முனைவோரைப் பாதுகாக்க ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்.'' என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.