தனிப்பட்ட தாக்குதலை மேற்கொண்ட நபர் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை! இலங்கை துள்ளிசை கலைஞர் குற்றச்சாட்டு
மட்டக்களப்பு - மண்டூர் பகுதியில் தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸார் முறையான விசாரணைகளை முன்னெடுக்காமல் தாக்குதல் நடத்தியவர்களுக்கு சார்பாக நடப்பதாக இலங்கையின் துள்ளிசை கலைஞர் பிரியன் குற்றச்சாட்டொன்றினை முன்வைத்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (18.05.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் தெரிவித்தாவது "எனது சொந்த ஊர் மட்டக்களப்பு மண்டூர் பகுதியாகும். எனது தந்தை 2006ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து நான் இங்கிருந்து கொழும்பு சென்றுவிட்டேன்.
அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற இசை நிகழ்வு ஒன்றுக்கு வருகைதந்தபோது இசை நிகழ்வு நடைபெற்று முடித்து எனது மாமாவினை பேருந்தில் ஏற்றிவிடுவதற்காக சென்றபோது மண்டூர் சந்தைக்கு பகுதியில் கடை வைத்துள்ளவர் என்மீது வாள் கொண்டு தாக்குதல் நடத்தினார்".
“கடந்த 2022ஆம் ஆண்டு என்னை குறித்த கடை உரிமையாளர் உனது தந்தையை கொன்றதுபோல் உன்னையும் கொல்வேன் என்று கொலை அச்சுறுத்தல் விடுத்தார்.
பொலிஸ் முறைப்பாடு
இது குறித்து வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தேன். அதன்போது விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில் என்னிடம் மன்னிப்பு கோரிய நிலையில் குறித்த விசாரணை முடிவுக்குவந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் 24ஆம் திகதி இரவு 8.30மணியளவில் குறித்த கடை உரிமையாளர் என்னை 2022ஆம் ஆண்டு கொலைசெய்ய முயற்சித்தேன் தப்பிவிட்டாய் இன்று தப்பமாட்டாய் என்று கூறி எனது கழுத்தைப்பிடித்து என்மீது வாளினால் தாக்குதல் நடாத்தியுள்ளார்” என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |