ஐரோப்பிய நாடொன்றில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்
இத்தாலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்த இலங்கையர்கள் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு சான்றிதழ் மொழிபெயர்ப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இலங்கையில் உள்ள இத்தாலிய தூதரகத்தின் போலி முத்திரையிடப்பட்ட சான்றிதழ்களை வழங்கி குடியுரிமைக்கு விண்ணப்பித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இத்தாலிக்கு அழைப்பதற்காக விசா விண்ணப்பிக்கும் போதும், இத்தாலிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் போதும், பிறப்பு, திருமணம், பொலிஸ் அறிக்கை சான்றிதழ்கள் மற்றும் பிற சான்றிதழ்களை இலங்கையில் உள்ள இத்தாலிய தூதரகத்தில் இருந்து சட்டப்பூர்வமாக்குவது கட்டாய நடைமுறையாகும்.
போலி ஆவணங்கள்
இவ்வாறான தேவையை நிறைவேற்றும் வகையில் முகவர்கள் ஊடாக ஆவணங்களை பெற்றுக்கொண்டவர்கள் விசாரணையின் போது சிக்கியுள்ளனர்.
வென்னப்புவ பிரதேசத்தில் வெளிநாட்டு சான்றிதழ் மொழிபெயர்ப்பு நிறுவனமொன்றை நடத்தும் ஒருவரினால் இந்த போலி சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த பிரச்சினைகளை எதிர்கொண்ட இலங்கையர்கள் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
