மனைவியின் தலைமுடியை மொட்டையடித்து கொடுமை: இங்கிலாந்தில் இலங்கையர் கைது
தனது மனைவியைத் தாக்கிய சம்பவத்தில் இலங்கை ஒருவர் இங்கிலாந்தின் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவியின் தலைமுடியை வெட்டி மொட்டையடித்து, அவரை இடுப்புப்பட்டியினால் தாக்கி கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
45 வயதான இந்த இலங்கையரும் அவரது மனைவியும் 2004ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சென்றுள்ளார். இதன்பின்னர் 2007ஆம் ஆண்டு மென்சஸ்டரில் குடியேறியுள்ளனர்.
கணவரைக் காப்பாற்ற முயற்சித்த பெண்
அந்த காலம் தொட்டே குறித்த இலங்கையர், தமது மனைவியைக் கொடுமைப்படுத்தி வந்ததாக நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமது மனைவி தொழில் செய்து வந்தபோதும், கணவரான இலங்கையர் தொழில்களில் ஈடுபடவில்லை.
இந்தநிலையில், தீய பழக்கங்களில் இருந்தும் மோசமான நண்பர்களிடம் இருந்தும் கணவரைக் காப்பாற்றும் முயற்சியின்போதே இலங்கை பெண், சித்திரவதைகளுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |