சர்வதேச பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பாதாள உலக செயற்பாட்டாளர்கள்! வெளியான தகவல்
சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பின் பிரபலமானவரும், பாதாள உலகக்கும்பலின் முக்கிய தலைவருமான 'ஹரக் கட்டா' எனப்படும் நதுன் சிந்தக மற்றும் பாதாள உலக தலைவன் என கூறப்படும் சலிது மல்ஷித உட்பட ஐந்து பாதாள உலக செயற்பாட்டாளர்கள் மடகாஸ்கரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஐவருடன் ஹரக்கட்டாவின் எஜமானி என கூறப்படும் மலேசிய பெண் ஒருவரும் அவரது தந்தையும் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மலேசியப் பெண்ணிடம் 38 மில்லியன் ரொக்கப் கையிருப்பு பணம் காணப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமற்ற வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

வெளியான தகவல்
தனியார் ஜெட் விமானம் மூலம் மடகாஸ்கருக்கு வந்து ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும், பின்னர் இரண்டு வாகனங்களில் பயணித்தபோது பொலிஸாரிடம் சிக்கியதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலனாய்வு அமைப்புகளும், விசேட பொலிஸ் குழுவும் இந்த பாதாள உலக குற்றவாளிகளை கைது செய்தமையை உறுதிப்படுத்தும் வகையில் தகவல்களை தேடி வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening