லண்டனில் இலங்கை இளைஞனின் கொடூர செயல்
பிரித்தானியாவின் லண்டனில் சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கையை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டனில் புகலிட விடுதியில் வசித்து வந்த 15 வயதுச் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக, இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
20 வயதான யாஷின் ஹிமாசர என்ற இலங்கையர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இளைஞனின் கொடூர செயல்
கடந்த நவம்பர் முதலாம் திகதி மேற்கு லண்டனில் உள்ள பெல்தாமில், பகுதியில் சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக அழைத்துச் சென்ற பின்னர், அவரை அடித்து கழுத்தை நெரித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் சிங்கள மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் தனது பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்தினார்.
கடத்தல், பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல், சிறுமியுடன் பாலியல் செயல்பாடு மற்றும் வேண்டுமென்றே கழுத்தை நெரித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஹிமாசர மறுத்துள்ளார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி வரை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளப்படவுள்ளது.
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri