இலங்கை பிரஜைக்கு அவுஸ்திரேலியாவில் காத்திருந்த அதிர்ச்சி
அவுஸ்திரேலியா சென்ற விமானத்தில் மோசமாக செயற்பட்ட இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
41 வயதான ஆண் ஒருவர் பெண் பயணியிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று மெல்பேர்ன் நகரின் ப்ரோமேடோஸ் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
வழக்கு பதிவு
பாதிக்கப்பட்ட பெண்ணால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் 1991 ஆம் ஆண்டு குற்றங்கள் (விமானசேவை) சட்டத்தின் 15(1) சரத்தின் பிரகாரம் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட குற்றத்துக்காக குறித்த நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
