அமைதி காக்கும் பணிகளுக்காக தெற்கு சூடானுக்கு அனுப்பப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தினர்
தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்கு இலங்கையின் இராணுவம் ஒரு குழுவை அனுப்பியுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அமைதி காப்பு பணிகளின்போது, இலங்கை இராணுவத்தின் மனித உரிமைப் பதிவுகள் குறித்து கடுமையான அதிருப்தி இருந்தபோதிலும், இலங்கையின் இராணுவக் குழு தெற்கு சூடானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறித்த இணையத்தளம் கூறியுள்ளது.
அதற்கமைய, தெற்கு சூடானுக்குச் செல்லும் குழுவில் 14 இராணுவ அதிகாரிகள், 01 கடற்படை அதிகாரி மற்றும் 49 ஏனைய அணிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உட்பட 64 இராணுவ உறுப்பினர்கள் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.
புதைக்கப்பட்டுள்ள சுதந்திரம்
இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர்களின் அறிக்கை வெளியானதோடு இலங்கை அமைதி காக்கும் படையினர் அனைவரையும் இடைநிறுத்துமாறும் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், இலங்கை துருப்புக்களின் விசாரணைக்கு பொறுப்பான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அரசியல்மயமாக்கப்பட்டு அதன் சுதந்திரம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது என்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
குற்றவியல் நடவடிக்கை
அதேவேளை, 2007ஆம் ஆண்டில், ஹைட்டியில் ஒரு சிறுமி மீதான அத்துமீறல் தொடர்பாக இலங்கைப்படையினர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
மேலும், இலங்கைப் படையினர் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மற்றும் சிறுவர்களுடன் தகாத நடவடிக்கையை மேற்கொள்ள உணவு மற்றும் பணத்தை பரிமாறிக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலோர் நாடு கடத்தப்பட்டாலும், அவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
