நெருக்கடியில் இலங்கையின் விமான சேவை - 30 விமான பயணங்கள் தடை - 8 சேவைகள் இரத்து
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கடந்த இரண்டு வாரங்களில், சுமார் 30 விமான பயணங்களை இரத்து மற்றும் தாமதப்படுத்தியுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விமானிகள் மற்றும் பொறியியலாளர்கள் தங்களின் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளத்தை உயர்த்துவதற்கான தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதே இதற்கான காரணமாகும் நேற்று முன்தினம் 8 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
விமானங்கள் இரத்து
இந்நிலைமை குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக பத்திரகேவிடம் வினவிய போது, தமது விமான சேவை நிறுவனத்திடம் போதிய விமானங்கள் இல்லை என்பதே பிரதான பிரச்சினையாகும்.
அதுமட்டுமின்றி, வேறு சில காரணங்களால் விமானங்கள் இரத்து செய்யப்படுவதுடன் தாமதமாகிவிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியின் காரணமாக தங்களது விமான நிறுவனம் தனது சேவையை சிறந்த முறையில் பராமரித்து வருவதில் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |