விமான சேவைகள் உயர் அதிகாரிக்கு லஞ்சம் வழங்கிய எயார் பஸ் நிறுவனம் :நிமல் சிறிபால டி சில்வா
இலங்கை விமான சேவையின் உயர் அதிகாரியொருவருக்கு எயார் பஸ் விமான தயாரிப்பு நிறுவனம் பெரும்தொகையொன்றை லஞ்சமாக கொடுத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபாலல டி சில்வா தெரிவித்துள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் விமான சேவை அமைச்சிற்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
ஆதாரங்கள்
எயார் பஸ் நிறுவனம் இலங்கை விமான சேவையின் உயர் அதிகாரியொருவருக்கு லஞ்சம் வழங்கியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் முடிவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாரிய ஊழல்
இதனையடுத்து பிரித்தானிய சட்ட நிறுவனம் ஒன்றின் ஊடாக வழக்குத் தொடர்ந்து எயார் பஸ் நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு ஒன்றைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் விமான சேவைக்கு எயார் பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதில் பாரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிய வந்ததையடுத்து அதற்கான டெண்டர் இரத்துச் செய்யப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியு்ளார்.
