அவுஸ்திரேலியாவில் இந்திய கடைக்கு எதிராக இலங்கையர் எடுத்த அதிரடி நடவடிக்கை
அவுஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள ஒரு வீட்டின் வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் இயங்கும் ஒரு இந்திய கடைக்கு எதிராக இலங்கையர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
குறித்த கடை 2023ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேலும் உறைந்த உணவுகள் உட்பட பல்வேறு பொருட்கள் அங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
கடையில் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இருப்பதும், அவர்களின் கவனக்குறைவான வாகன நிறுத்துமிடமும் அந்தப் பகுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
ஆபத்தான சூழ்நிலை
கடைக்கு பொருட்களை கொண்டு செல்லும் லொறிகள் வீதியில் பயனாளர்களுக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன.
காலை 6:30 மணி முதல் இரவு 11:00 மணி வரை கடை இயங்குகிறது, மேலும் பொருட்களை ஏற்றும்போது கடையின் லொறிகள் வீதிகளை தடுக்கும் வகையில் நிறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரி ACT ஆளுநர் ஆண்ட்ரூ பாருக்கு ,இலங்கையரான பிரசாத் அபேரத்னே ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் இந்த பிரச்சினையை ஆராய்வதாக அமைச்சர் மரிசா பேட்டர்சன் உறுதியளித்துள்ளார்.
கடை உரிமையாளர்
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்று கடை உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் தங்கள் வணிகத்திற்கு ABN மற்றும் உள்ளூர் அரசாங்கத்திடமிருந்தும் ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 7 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
