இலங்கை வந்த வெளிநாட்டவர்களின் நெகிழ்ச்சி செயல்
நானுஓயா - ரதெல்ல வீதியில் இடம்பெற்ற விபத்தின் போது வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்தவர்களின் செயற்பாடு நெகிழ வைத்துள்ளது.
லொறி ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேர் எதிரே வந்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதியது. இதன் போது லொறி விட்டு வீதியை விலகி விபத்துக்குள்ளானது.
லொறியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் இருந்த நிலையில் அவர்களில் இருவர் காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வெளிநாட்டு பெண்கள்
இதன்போது இலங்கைக்கு சுற்றுலா பயணம் வந்த இரண்டு வெளிநாட்டு பெண்கள் உடனடியாக அவ்விடத்தில் உதவியுள்ளனர்.
அங்கு லொறியில் பயணித்த சிறுமி ஒருவர் மிகவும் பயந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
முதலில் அவரது பயத்தை போக்குவதற்கு அந்த பெண்கள் நடவடிக்கை எடுத்தனர். பயத்தை போக்கிய பின்னர் முதலுதவி சிகிச்சைகளை அளித்துள்ளனர்.
அங்கிருந்தவர்கள் சம்பவத்தை வேடிக்கை பார்த்த நிலையில் குறித்த சுற்றுலா பெண்களின் செயற்பாடு பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
