நான்காவது தோல்வியை சந்தித்த இலங்கை மகளிர் அணி
சர்வதேச கிரிக்கட் சம்மேளத்தின் மகளிருக்கான உலகக்கிண்ண 20க்கு20 தொடரின் மற்றுமொரு ஆட்டத்திலும் இலங்கை தோல்வி கண்டுள்ளது.
நேற்று (12) சார்ஜாவில் இடம்பெற்ற இந்தப்போட்டியில், நியூஸிலாந்து அணி, இலங்கை அணியை வெற்றி கொண்டது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களின் முடிவில், 5 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
நான்கு போட்டிகளிலும் தோல்வி
இதில் சாமரி அத்தபத்து 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதனையடுத்து பதிலுக்கு துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 118 ஓட்டங்களை எடுத்து போட்டியில் வெற்றி பெற்றது.
இதில் Georgia Plimmer என்ற வீராங்கனை 53 ஓட்டங்களை தமது அணிக்காக பெற்றார்
இந்தநிலையில், இலங்கை நேற்றைய போட்டியில் அடைந்த தோல்வியுடன், தாம் போட்டியிட்ட நான்கு போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ளது.
இதன்படி அந்த அணி, ஏ பிரிவு அணிகளின் புள்ளிப்பட்டியலில் புள்ளிகள் எதனையும் பெறாமல் கடைசி நிலையில் உள்ளது
6 புள்ளிகளுடன் முன்னிலை
இந்தப்பட்டியலில், அவுஸ்திரேலியா 6 புள்ளிகளுடன் முதல் நிலையில் உள்ளது. இந்தியா, நியூஸிலாந்து அணிகள் 4 புள்ளிகளுடன் இரண்டாம் நிலையில உள்ளன.
பாகிஸ்தான் இரண்டு புள்ளிகளுடன் மூன்றாம் நிலையில் உள்ளது.
பி பிரிவு அணிகளின் புள்ளிகளின்படி, தென்னாபிரிக்க அணி 6 புள்ளிகளுடன் முன்னிலைப் பெற்றுள்ளது மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் 4 புள்ளிகளுடன் இரண்டாம் நிலையில் உள்ளன.
பங்களாதேஷ் இரண்டு புள்ளிகளுடன் மூன்றாம் நிலையில் உள்ளது. ஸ்கொட்லாந்து புள்ளிகள் எதனையும் பெறாமல் கடைசி நிலையில்; உள்ளது.
இந்தநிலையில் இன்று இங்கிலாந்து அணிக்கும் ஸ்கொட்லாந்து அணிக்கும் இடையிலான போட்டியும், இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான போட்டியும் இடம்பெறவுள்ளன.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |