முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும் இலங்கை அணைக்கும் எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 47.1 ஓவர்கள் நிறைவில் 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. மே.தீவுகள் அணி சார்பாக ஹேய்லி மெதிவ்ஸ் 38 ஓட்டங்களையும், ஸ்டெபைன் டெய்லர் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை மகளிர் அணி
இதன்படி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 34.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான விஷ்மி குணரத்ன 40 ஓட்டங்களையும், சமரி அதபத்து 38 ஓட்டங்களையும் பெற்றதுடன், முதல் விக்கெட்டுக்காக 88 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
இவ்வாறு இலங்கை அணி வீராங்கனைகளின் துடுப்பாட்டத்துடன் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இலங்கை மகளிர் அணி முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam