தென்னிலங்கையில் ஆபத்தான பெண்ணின் ஆடம்பர வீடு அரசினால் பறிமுதல்
போதைப்பொருள் கடத்தல்காரரான கயானி தில்ருக்ஷியின் வீட்டை பறிமுதல் செய்யும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் காரணமாக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள குடு கயானி என்ற பெண்ணின் வீடே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவின் மோசடி விசாரணை பிரிவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
போதைப்பொருள்
2019 ஆம் ஆண்டு முதல் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் அவர் இந்த வீட்டைக் கட்டியுள்ளார்.
கட்டப்பட்ட வீட்டின் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வீடு கட்டுவதற்கு பணம் எப்படி கிடைத்தது என்பதை தெரிவிக்க அந்த பெண்ணால் முடியாமல் போனதால் விசாரணை அதிகாரிகள் வீட்டை பறிமுதல் செய்துள்ளனர்.குறிப்பிட்டுள்ளனர்.