சீனாவுக்கு சார்பாக இருக்கும் வரை இலங்கைக்கு மீட்சியில்லை - விஜயதாச ராஜபக்ச
இலங்கை தற்போது எரி மலையின் மீது இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச(Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார்.
அந்த எரிமலை எப்போது வெடித்து சிதறும் என்பதை எவராலும் கூற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
''சீன சார்பு ஆட்சியாளர்கள் உருவானா நாளில் இருந்து நாடு ஆபத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. நாட்டில் அரசியல்வாதிகள் ருவான்வெலிசேய, தலதா மாளிகை ஆகியவற்றுக்கு சென்று நாட்டில் எந்த தேசிய வளங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது என உறுதி எடுத்துக்கொள்கின்றனர்.
அவ்வாறு கூறிய ஒரு அணி 2000 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்து, பொருளாதார வளங்களை விற்பனை செய்தது. இறுதியில் அவற்றை காப்பாற்ற வரிசையாக வழக்குகளை தொடர வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
காப்புறுதிக் கூட்டுத்தாபனம், லங்கா வைத்தியசாலை, துறைமுக காணிகள், இலங்கை போக்குவரத்துச் சபை என நாட்டின் தேசிய வளங்கள் விற்பனை செய்யப்பட்டன.
வழக்குகளை தொடர்ந்து அவற்றை மீண்டும் பெற்றுக்கொண்டோம். இதனை அரசாங்கமோ, எதிர்க்கட்சியோ செய்யவில்லை, உயிருக்கு ஆபத்து இருப்பதை கவனத்தில் கொள்ளாது அவற்றை நானே செய்தேன்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ரணில் விக்ரமசிங்க ஹம்பாந்தோட்டை துறைமுத்தை சீனாவுக்கு குத்தகைக்கு கொடுத்தன் நெருக்கடியை தற்போது இலகுவாக தீர்க்க முடியாது.
சீனாவுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வழங்கியதால், அமெரிக்காவுக்கும் தனக்கும் அது வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது.
சீனாவுக்கு சார்பான நிலைப்பாட்டில் இருக்கும் அவரை, இலங்கை, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து விடுப்பட முடியாது'' எனவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
