இலங்கையில் பயணக்கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை - இராணுவ தளபதி
இலங்கையில் தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு நாட்டை முடக்குவதற்கான எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் ஓரிரு நாட்களில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக இராணுவத் தளபதியும், கொவிட் 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை தடையின்றி தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
நாளை முதல் முப்படையினரை உட்படுத்தி கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகம் கொரோனா அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் கொவிட் தடுப்பூசி ஏற்றும்பணிகள் துரிதகதியில் இடம்பெறும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri