இந்தியாவின் அடுத்த மாநிலமாக மாறும் இலங்கை - மோடியின் விஜயத்தில் அம்பலமான உண்மை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் மகத்தான வரவேற்பினை வழங்கியிருந்தது.
தனக்கான வரவேற்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக இந்திய பிரதமர் தனது சமூக வலைத்தளமான எக்ஸில் குறிப்பிட்டிருந்தார்.
மகத்தான வரவேற்பு
இந்நிலையில் கொழும்பை வந்தடைந்த இந்திய பிரதமருக்கு இலங்கை வாழ் இந்தியர்கள் மகத்தான வரவேற்பினை வழங்கியிருந்தனர்.
இந்திய மாநிலம் ஒன்றுக்கு பிரதமர் விஜயம் மேற்கொள்ளும் போது, அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடுவதை போன்று, பிரதமர் கொழும்பில் தனது செயற்பாட்டினை வெளிப்படுத்தியிருந்தார்.
Highlights from Colombo…
— Narendra Modi (@narendramodi) April 5, 2025
The community connect and cultural vibrancy were on full display. pic.twitter.com/V1wkwTBrB4
அந்தக் காட்சிகளை பார்க்கும் போது இந்தியாவின் மற்றுமொரு மாநிலமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதா என சிந்திக்கும் அளவுக்கு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஏற்கனவே இந்தியாவின் முற்றுகைக்குள் சிக்கியுள்ள இலங்கையை மற்றுமொரு இந்தியாவின் மாநிலமாக மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்தியாவின் நாணயத்தையும் இலங்கையில் பயன்படுத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில், இந்திய பிரதமரின் வருகையின் போதான வரவேற்பும் அதனை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.