இலங்கையை 14 நாட்கள் முழுமையாக மூடுமாறு ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை
இலங்கையை 14 நாட்களுக்கு முழுவதுமாக மூடுமாறு கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதேவேளை, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் எஸ். முனசிங்க 14 நாள் மூடுவது குறித்து முடிவு செய்ய ஒரு சிறப்பு கூட்டம் உள்ளது என்று கூறினார்.
முழுமையாக 14 நாட்கள் மூடுவது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. தற்போது முன்னர் அறிவிக்கப்பட்டவை மட்டுமே தற்போது என்னால் கூற முடியும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரச மருத்துவ சங்கங்கமும் 14 நாட்கள் முழுமையான பூட்டுதல் அல்லது ஊரடங்கு உத்தரவு விதிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.