வெள்ளை வானில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களின் கண்களுக்கு நடந்தது என்ன! வெளியான தகவல்கள்
1989 -1990 காலப்பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள், ஜேவிபி உறுப்பினர்களின் கண்கள் தோண்டப்பட்டு சிறுநீரகங்கள் வெட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் தெரிவிக்கையில்,
மேற்குறித்த சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஜப்பானில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் இலங்கைக்கு வருகைத் தந்து கண்தானம் சம்பந்தமான தரவுகளைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
இதன்போது, ஜேவிபி காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் பலவந்தமாக பிடிக்கப்பட்டு கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களின் கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டனவா என்ற கோணத்தில் அவர் விசாரணையை ஆரம்பித்தார்.
அத்தோடு தமிழர்களுடைய பகுதிகளில், குறிப்பாக கிழக்கிலே வெள்ளைவான்களில் கடத்தப்பட்ட அந்த இளைஞர்களுடைய கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு, சிறுநீரகங்கள் சத்திரசிகிச்சை ஊடாக வெட்டி எடுக்கப்பட்டு ஜப்பானுக்கு அனுப்பப்பட்டனவா என்ற தகவலை அவர் திரட்டினார்.
குறித்த விடயமானது ஓரளவுக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் ஜப்பானிய பத்திரிகை ஒன்றில் இதனை வெளிப்படுத்தி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெள்ளைவானில் கடத்திச் செல்லப்பட்டவர்கள் உயிருடன் வந்த சம்பவங்களும் குறைவாகத் தான் இருந்தது என மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..👇