தொடரும் சீரற்ற காலநிலை: உலங்கு வானூர்திகளுடன் களமிறங்கிய விமான படை
இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக அவசர காலங்களில் மக்களை மீட்க 6 உலங்கு வானூர்திகள் தயார் நிலையில் உள்ளதாக விமானப்படை ஊடகப் பணிப்பாளர் குரூப் கப்டன் எரந்த கிகனகே தெரிவித்துள்ளார்.
இரத்மலானை, ஹிகுராக்கொட, பலாலி, வீரவில, அம்பாறை, அனுராதபுரம் விமானப்படை தளங்களில் உலங்கு வானூர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக விசேட பயிற்சி பெற்ற விமானப்படை படைப்பிரிவின் விசேட அதிரடிப்படையினர் தயார்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அனர்த்த நிலைமை
மேலும், விமானப்படையின் கண்காணிப்பு விமானங்கள் அனர்த்த நிலைமைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக எரந்த கிகனகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan