லம்ப்டா மாறுபாடு தொடர்பில் சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!
கோவிட் வைரசின் "லம்ப்டா" (Lambda)மாறுபாடு சுமார் 30 நாடுகளில் பரவுவதாகக் கண்டறியப்படும் நிலையில் இலங்கை எச்சரிக்கையாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே முகக்கவசம் அணிவது மற்றும் சமூக தூரத்தைப் பராமரித்தல் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கோவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இது தொடர்பில் கருத்துரைக்கையில், லம்ப்டா மாறுபாடு மற்ற நாடுகளில் பரவியுள்ளதன் காரணமாக இதுவரை புதிய முன்னெச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
கோவிட் வைரசின் விளைவாக அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் இந்த வாரம் மேலும் தளர்த்தப்பட்டன, ஆனால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஹேமந்த ஹேரத் தமது கருத்தில்,
லம்ப்டா மாறுபாடு குறித்த தகவல்களைச் சுகாதார அதிகாரிகள் இன்னும் சேகரித்து வருகின்றனர். எவ்வாறாயினும், எந்தவொரு மாறுபாடும் பரவாமல் தடுக்க பொதுமக்கள் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது என்ன மாறுபாடு என்பது முக்கியமல்ல. எந்தவொரு பரவலையும் தடுக்க சாதாரண கோவிட் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவது முக்கியம் என்று அவர் கூறியுள்ளார்.
அறிக்கைகளின்படி, லம்ப்டா மாறுபாடு, அல்லது சி37, கடந்த ஆகஸ்ட் 2020 இல் பெருவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அத்துடன் ஜூன் நடுப்பகுதியில, தென் அமெரிக்காவில் குறிப்பாக அதிக அளவில் 30 நாடுகளில் அல்லது பிரதேசங்களில் இந்த மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
