காணாமல் ஆக்கப்பட்ட கணவன்! அப்பாவைத் தேடும் மகள் : துயர வரலாறொன்றின் நடமாடும் சாட்சியம்(Video)
தாயகம் கோரிய, ஈழ விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருந்தாலும், அதன் சுவடுகள் இன்று வரை மக்கள் மனதில் பசுமையாக உள்ளது.
30 வருட போராட்டத்தில் தமிழ் மக்கள் இழந்தது மிக அதிகம், தங்களது சொத்துக்கள், தங்களது உறவுகள், உரிமைகள் என்று அனைத்தும் பரிகொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இறுதியாக யுத்தமும் முடிவுக்கு வந்ததுடன், அன்று அடைந்த துயரங்கள் இன்றும் வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ் சொந்தங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது.
காணாமல் போன உறவுகளை தேடி இன்றும் போராடும் பலர், யுத்தத்தில் பறிகொடுத்த தமது சொந்தங்களை நினைத்து இன்றும் ஏங்கி நிற்கும் பலர், தந்தையை இழந்து, தாயை இழந்து, உடன்பிறப்புக்களை இழந்து யாரும் அற்ற அநாதரவான நிலையில் தற்போதும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றர்.
அப்படி ஒரு குடும்பத்தின் துயர் மிகுந்த கதையைத் தான் எமது இன்றைய உறவுப்பாலம் நிகழ்ச்சியினூடாக வெளிக்கொண்டு வந்திருக்கின்றோம். உதவும் உள்ளம் கொண்டவர்கள் உங்கள் ஆதரவு கரங்களை நீட்டலாம்..
உறவுப்பாலம்...





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri

ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri
