விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்ட இராணுவத்தினர் போர்க்குற்றவாளிகளா..! நாமல் எம்.பி சீற்றம்
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் முதலீட்டாளர்களாகவும், அந்த அமைப்பிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்த படையினர் போர்க்குற்றவாளிகளாகவும் பார்க்கப்படும் நிலையே தற்போதைய ஆட்சியின் கீழ் காணப்படுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் அப்பாவி இளைஞர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகளைத் தொங்கவிடுவதற்கு நிதி வழங்கிய தமிழ் டயஸ்போராக்களை மிகப்பெரிய முதலீட்டாளர்களாகக் கருதும் அரசு, போரை முடிவுக்குக் கொண்டு வந்த படையினரைக் குற்றவாளியாகப் பார்க்கின்றது.
அரசு செய்யும் சீரழிவு..
முன்னாள் கடற்படைத் தளபதி சிறையில் உள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பை ஊக்குவித்தவர்கள் இன்று முதலீட்டாளர்கள், அந்த அமைப்பிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்தவர்கள் போர்க்குற்றவாளிகளாகியுள்ளனர்.

விடுதலைப்புலிகளால் செய்ய முடியாமல்போன கலாசாரச் சீரழிவைத் தற்போதைய அரசு செய்கின்றது. அதனால்தான் பாடத்திட்டத்தில் இருந்து வரலாற்றுப் பாடத்தைக்கூட நீக்குவதற்கு முற்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam