இலங்கை இறுதிப்போர் குறித்து கனேடிய பிரதமரின் குற்றச்சாட்டு! தூதுவரிடம் அலி சப்ரி அதிருப்தி - பத்திரிகை கண்ணோட்டம்
கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷை கடந்த 19 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சில் சந்தித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, மே 18 ஆம் திகதி கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கையை நிராகரித்ததுடன் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
இங்கையில் இனப்படுகொலை தொடர்பான கனேடிய பிரதமர் வெளியிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான வெளிநாட்டமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். யூ.எம்.அலி சப்ரி, கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பின் படி தூதுவரை அவர் அமைச்சில் சந்தித்த போது இந்த கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகை கண்ணோட்டம்,