உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்த வீரர்: குசால் மெண்டிஸ் புதிய சாதனை
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் ஒருவர் அடித்த அதிவேக சதம் என்ற புதிய சாதனையை குசல் மெண்டிஸ் படைத்துள்ளார்.
இவர் 65 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக சதத்தை பதிவு செய்துள்ளார்.
இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 344 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
வலுவான நிலையில் இலங்கை
இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 122 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 108 ஓட்டங்களையும், பதும் நிஸ்ஸங்க 51 ஓட்டங்களையும் பெற்றனர். மேலும் சதீர சமரவிக்ரம இன்றைய போட்டியில் 82 பந்துகளில் தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.
பந்துவீச்சில் ஹசன் அலி 04 விக்கெட்டுக்களையும், ஷஹீன் ஷா அப்ரிடி, மொஹமட் நவாஸ், ஷதாப் கான், ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா 01 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
அதன்படி, 345 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.
முதலாம் இணைப்பு
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது ஆரம்பமாக்கியுள்ளது.
இப்போட்டி ஹைதராபாத் மைதானத்தில் இன்று (0.10.2023) நடைபெற்று வருகின்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளதுடன் இலங்கை அணித் தலைவர் தசுன் சானக்க முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளார்.
காஸா பகுதியில் தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் கடற்படை : தாக்குதல் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட ஹமாஸ்
இலங்கை அணி
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 8.2 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 48 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் சூழல் பந்து வீச்சாளர்களில் ஒருவரான மகீஷ் தீக்ஷன விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.