ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த இலங்கை அணி
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
கண்டி-பல்லேகல மைதானத்தில் இந்த போட்டி இடம்பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 294 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி
இதனை தொடர்ந்து, 195 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 38 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது.
இதன் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கி புதைந்த மகளின் கைகளை கோர்த்த நிலையில் தந்தை News Lankasri

தனக்கு செம ஹிட் படம் கொடுத்த இயக்குனருடன் பேச்சு வார்த்தையில் நடிகர் அஜித்- யாருடன் தெரியுமா? Cineulagam

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
