விமான நிலையத்தில் வைத்து பெண் ஒருவர் கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போலி விசாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியன குறித்த பெண் மீது சந்தேகம் அடைந்து விமான நிலைய குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணுக்கு போலி விசாவை பெற்றுக்கொடுக்க அதிகாரி ஒருவர் உதவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கை
இதனைதொடர்ந்து குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குறித்த பெண்ணையும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று (28.07.2023) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





முதல் மனைவி உடன் ஜோடியாக வந்த மாதம்பட்டி ரங்கராஜ்.. போட்டோ வைரல்! அப்போ இரண்டாம் மனைவி நிலை.. Cineulagam
