மரக்கறிகளின் விலை உயர்வு ஏப்ரல் வரை தொடரும்..!

Food Shortages Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Vegetables Price Vegetable Price Today
By Thulsi Jan 18, 2024 11:58 AM GMT
Report

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் வரலாற்றில் முதல் தடவையாக கரட் உள்ளிட்ட மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மரக்கறிகளின் விலை ஏற்றம் ஏப்ரல் வரை நீடிக்கும் என்றும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவரும் அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார நிலையத்தின் ஆலோசகருமான அருண சாந்த ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா மத்திய பொருளாதார காரியாலயத்தில் இன்று (18.01.2024) வியாழக்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் திடீரென அதிகரித்த தேங்காய் விலை

நாட்டில் திடீரென அதிகரித்த தேங்காய் விலை

தரம் குறைந்த  கரட்

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் கடந்த வருடம் இறுதியில் பெய்த கடும் மழை காரணமாக அதிகமான பிரதேசங்களில் ஏராளமான பயிர்கள் அழிவடைந்துள்ளது. இதன் காரணமாகவே நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார நிலையங்களிலும் மரக்கறி வகையில் விலை அதிகரித்து காணப்படுகின்றது.

மரக்கறிகளின் விலை உயர்வு ஏப்ரல் வரை தொடரும்..! | Sri Lanka Vegetable Prices Will Increase

அத்துடன் நுவரெலியா பிரதேச விவசாயிகளிடம் இருந்து கடந்த ஓரிரு நாட்களாக கொள்வனவு செய்யப்பட்ட கரட் சரியான தரம் வாய்ந்ததாக இல்லை எனவும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காரணம் தேவைக்கேற்ப கரட் இல்லாத காரணத்தால் அத்துடன் அதிக விலை காரணமாக விளைச்சலுக்கு உகந்த நிலையில் இல்லாத கரட்களையும் அறுவடை செய்யப்படுகின்றது.

யாழ். உட்பட நான்கு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

யாழ். உட்பட நான்கு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சீரற்ற காலநிலை 

கடந்த வருடங்களில் நுவரெலியா மத்திய பொருளாதரத்திலிருந்து ஏனைய வெளி மாவட்டங்களில் உள்ள பொருளாதார நிலையத்துக்கு நாளொன்றுக்கு 35 ஆயிரம் கிலோ கிராம் கரட் ஏற்றுமதி செய்யப்பட்டது.

மரக்கறிகளின் விலை உயர்வு ஏப்ரல் வரை தொடரும்..! | Sri Lanka Vegetable Prices Will Increase

ஆனால் தற்போது குறைவடைந்து ஒரு நாளுக்கு ஐந்தாயிரம் ஆறு ஆயிரம் போன்ற அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இதனால் மத்திய நிலையத்தில் தொழில் புரிந்த 200-க்கும் அதிகமானவர்கள் தற்போது தொழில் இழந்து நடுவீதியில் நிற்கின்றன.

இதுபோலவே ஏனைய மரக்கறி வகைகளும் சீரற்ற கால நிலை ஏற்பட்டு அழிவடைந்த காரணத்தால் அவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு அதிக விலைகளுக்கே விற்பனை செய்யப்படுகின்றது அவைகளும் சிறந்த தரத்தில் இல்லை என்பதும் உண்மையான விடயம் என தெரிவித்தார்.  

இந்நிலையில், நாட்டில் வரலாறு காணாத வகையில் உயர்ந்திருந்த கரட்டின் விலை இன்று சடுதியாக குறைவடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக 2,000 ரூபாவையும் தாண்டி விற்பனை செய்யப்பட்ட கரட்டின் விலை இன்று 1இ000 ரூபாவாக குறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரை அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற செந்தில் தொண்டமானின் காளை

மதுரை அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற செந்தில் தொண்டமானின் காளை

பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US