மலையகத்தில் உள்ள பாடசாலைக்கான உதவித் திட்டங்கள் தொடர்பில் முன்மொழிவு! அ.அரவிந்தகுமார் (video)
" இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை எதிர்வரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும், இதன்போது மலையகத்தில் உள்ள பாடசாலைக்கான உதவித் திட்டங்கள் தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்படும்” என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் புஸல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)க்கு இன்று (07.12.2022) பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, பாடசாலை அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் சமூகத்தினருடன், கல்வி நிலைமை குறித்து கலந்துரையாடியதுடன், பாடசாலைக்கு தேவையான உதவிகள் பற்றியும் கேட்டறிந்தார்.
இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார்,
பாடசாலைகளில் உள்ள பிரச்சினை
"அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் சமூகத்தை சந்தித்தேன், குறைப்பாடுகளை கேட்டறிந்தேன்.இப்பகுதியில் சரஸ்வதி மத்திய கல்லூரி முதன்மை பாடசாலையாக விளங்குகின்றது. தோட்டப்பகுதிகளை உள்ளடக்கிய வகையில் அமைந்துள்ள பழமையான பாரம்பரியம்மிக்க இப்பாடசாலைக்கு உதவிகளை வழங்க வேண்டியது கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் எனது பொறுப்பாகும்.
எதிர்வரும் ஒன்பதாம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ளேன். இப்பாடசாலை பற்றியும் எடுத்துரைப்பேன்.
அதுமாத்திரமின்றி மலையகத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடவுள்ளேன்." என்றார்.





பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
