தேயிலை தோட்டத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!
புஸ்ஸல்லாவ சோகமாவத்த பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் ஹெல்பொட, கட்டுகிதுல பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய திருமணமான பெண் என தெரியவந்துள்ளது.
119 பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலின் படி சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது கொலையா, தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் ஏற்பட்ட மரணமா என்பது தொடர்பில் புஸ்ஸல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
