இலங்கையில் மலையகத் தமிழர்களின் எழுச்சிக்காக காத்திருக்கும் தமிழகம் : ஸ்டாலின்
இலங்கையில் மலையகத் தமிழர்களின் கல்வி, சுகாதாரம், வாழ்விடப் பொருளாதார உதவி உள்ளிட்டவற்றில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும், அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு சென்று 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், இலங்கையில் இடம்பெற்ற நாம் 200 நிகழ்வில், சென்னையில் இருந்து உரையாற்றிய ஸ்டாலின், மலையகத் தமிழர்கள் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் எழுச்சி பெறும் நாளை எண்ணி தமிழ்நாடு காத்திருப்பதாக குறிப்பிட்டார்.
மலைநாட்டு தமிழர்களின் வரலாறு
இலங்கையில் மலைநாட்டுத் தமிழர்களின் வரலாறு கோப்பி தோட்டங்களுடன் ஆரம்பமானது.
தேயிலை மற்றும் கோப்பி தோட்டங்களிலும், பின்னர் பணப்பயிர் உற்பத்தியிலும் அவர்கள் ஆற்றிய முக்கிய பங்கை தமிழக முதல்வர் தமது உரையின்போது கோடிட்டுக் காட்டினார்.
மலையகத் தமிழர்கள் இலங்கையின் வளர்ச்சிக்காக தமது இரத்தத்தையும் வியர்வையும் நேரத்தையும் கொடுத்து உழைத்தார்கள்.
அவர்கள் இலங்கைக்காக தங்கள் உழைப்பைக் கொடுத்தார்கள், அவர்கள் அதைத் தொடர்ந்து செய்கிறார்கள் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 18 மணி நேரம் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
