ஆறு நாட்களில் ஈட்டிய பல பில்லியன் ரூபா வருமானம்!
புத்தாண்டு காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஆறு நாட்களில் ஒரு பில்லியனை தாண்டிய வருவாயை ஈட்டியுள்ளதாக அதன் தலைவர் சஜீவ நந்தன கணகரத்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை அலுவலகத்தில் அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தோடர்ந்துரையாற்றிய அவர்,
இந்த வருவாய் இலங்கை வரலாற்றில் முதல் முறையாகும் எனவும் குறிப்பிட்டார். நாங்கள் இந்த புத்தாண்டு வேவையை இரு கட்டங்களாக ஆரம்பித்தோம்.
ஆறு நாட்களில் ஈட்டப்பட்ட அதிக வருமானம்
கோழும்பிலிருந்து வெளி இடங்களுக்கும்.கொழும்புக்கு வெளியில் இருந்து கொழும்புக்குள் பயணிகளை கொண்டு வருவதாகும்.கொழும்பில் இருந்து வெளியில் செல்லுவதற்காக 8 ஆம் திகதி சேவைகளை ஆரம்பித்தோம்.
அதாவது 8 ஆம் திகதியில் இருந்து 13 ஆம் வரை நடத்தினோம்.மேலும் 15 ஆம் திகதி முதல் வெளிமாட்டங்களில் இருந்து கொழும்புக்கு பயணிகள் சேவையை ஆரம்பித்துள்ளோம்.
இச் சேவை 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.ஏப்பிரல் 11 ஆம் திகதி 213 மில்லியன் வருவாய் ஈட்டப்பட்டது.
இது வரலாற்றில் கிடைத்த அதிக வருமானம்.அன்றைய தினமே அதிக பயணிகளை போக்குவரத்து சபை கொண்டு சென்றுள்ளது.

எங்களிடம் இருக்கு பஸ்களில் ஒரு நாளைக்கு நாடு முழுவதும் நடக்கும் போக்குவரத்தில் 10 இலட்சம் பயணிகளே பயணிப்பது வழமையாகும்.
ஆனால் 11 ஆம் திகதி மட்டும் 20 இலட்சம் பயணிகள் போக்குவரத்து சபை பஸ்களை பயன்படுத்தியுள்ளனர்.இந்த விசேட புத்தாண்டு சேவைகளுக்கு சபையில் இருக்கும் பஸ்களை பயன்படுத்தியே குறித்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இதற்கு ஊழியர்களின் அயராத ஒத்துழைப்பே காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam