தொடருந்தில் பயணிக்கும் மக்களுக்கு முக்கிய தகவல் - புதிய மோசடி குறித்து எச்சரிக்கை
இலங்கையில் தொடருந்து பயணங்களின் போது பயணப் பொதிகளை எடுத்துக் கொண்டு வேறு பயணப்பொதிகளை வைத்து செல்லும் புது வகையான திருட்டு இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே இடம்பெறும் இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பயணிகள் அவதானமாக இருக்க வேண்டும் என இலங்கை தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் பிரதிச் செயலாளர் சிந்தக சிறிவர்தன தெரிவித்தார்.
தொடருந்தில் பயணிகள் அதிகமுள்ள பெட்டிகளுக்குள் ஏறும் இந்த ஏமாற்ற கும்பல் போலியான பைகளை வைத்து விட்டு உண்மையானவற்றை எடுத்துச் செல்கின்றனர்.
திருட்டு சம்பவங்கள்
பயணிகளின் தங்கள் பை தொடர்பில் கவனத்தை இழக்கும் வரை காத்திருந்து பைகளை எடுத்துக் கொண்டு இறங்கி விடுகின்றார்கள்.
தொடருந்தில் இருந்து இறங்கும் முன் பைகள் மாற்றப்பட்டிருப்பதனை பயணி கண்டுபிடித்து விட்டால் தவறுதலாக பை மாறிவிட்டதாக கூறி சமாளித்துவிட்டு செல்வதாகவும் தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
