கொழும்பில் சடலத்தால் பொலிஸாருக்கு ஏற்பட்ட குழப்பம் - வீதியில் நடந்த குளறுபடி
பொரளை பிரதேசத்தில் கவனக்குறைவாக ஓட்டிச் சென்ற இறுதி ஊர்வலத்திற்கு பயன்படுத்தும் வாகனத்தை தடுத்து நிறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
இதன் போது அதில் சடலம் ஒன்று இருப்பதைக் கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொரளை பொலிஸ் அதிகாரிகள் பொரளை டி.எஸ். சேனநாயக்க சந்தியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது, கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதற்காக இறுதி ஊர்வல வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டது.அத்துடன், சாரதி மதுபோதையில் இருந்ததால் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வாகன சாரதி
வாகனம் பொரளை பொலிஸாருக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர், காரை விட்டு இறங்கிய சாரதி, பின்னால் சடலம் இருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதனால் குழப்பமடைந்த பொலிஸார், மற்றொரு இறுதி ஊர்வல வாகனத்தை அழைத்து சடலத்தை அனுப்பியுள்ளனர்.
பிரபல மலர்சாலை
குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தினர். வாகனம் கொழும்பில் உள்ள பிரபல மலர்சாலைக்கு சொந்தமானது.
அந்த சந்தர்ப்பத்தில் சடலத்துடன் அந்த வாகனத்தை ஓட்டி சென்றவர் மலர்சாலையின் மேலாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.